நிரம்பும் கட்டத்தில் கர்நாடகா அணைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பும் கட்டத்தில் கர்நாடகா அணைகள்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கர்நாடக அணைகள் நிரம்பும் கட்டத்தை நெருங்கியுள்ளதால், உபரி நீர் திறப்பு, ஓரிரு நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை திறந்து விட வேண்டும். தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதன் காரணமாக, ஹேரங்கி, கபினி அணைகள் நிரம்பி விட்டன.ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பு வதற்கு, இன்னும், 10 டி.எம்.சி., நீர் தேவை. தற்போது, நான்கு அணைகளிலும் சேர்த்து, 92 டி.எம்.சி., நீர் நிரம்பிஉள்ளது.
தொடர் மழையால், நான்கு அணைகளுக்கும் மொத்தமாக, நேற்று, வினாடிக்கு, 1.26 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்தது. அவற்றில் இருந்து வினாடிக்கு, 66 ஆயிரத்து, 897 கன அடி நீர் மட்டுமே, காவிரியில் வெளியேற்றப்படுகிறது.ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு வரும் நீர், பெருமளவு சேமிக்கப்பட்டு வருவதால், அவை விரைவில் முழுக் கொள்ளளவை எட்டி விடும்.
எனவே, மழை தொடரும் பட்சத்தில், ஓரிரு நாட்களில், காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா திறக்கும் வாய்ப்புள்ளது.



- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-ஜூலை-201806:10:14 IST Report Abuse
Amirthalingam Sinniah வரும் நீரை விரயம் செய்யாமல், துரவுகளை வெட்டி சேமியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை