தேனியில் வழக்கறிஞரை தாக்கிய மூவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் வழக்கறிஞரை தாக்கிய மூவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தேனி அம்மச்சியாபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் காளிதாஸ் ,32. இவர் தாடிச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணமான நபரால் ஏமாற்றப்பட்டது தொடர்பான வழக்கில், திருமணமானவருக்கு ஆதரவாக பேசி பிரச்னையை முடித்துள்ளார்.பின் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றதற்காக, வழக்கறிஞர் கட்டணம் வழங்க வலியுறுத்தி பெண் வீட்டாரிடம் கேட்கச் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாடிச்சேரியில் உள்ள பெண் வீட்டு உறவினர்கள் ஊர்காவலன், சக்திவேல், ரஞ்சித், பால்ராஜ், ராசு, முருகன் ஆகிய ஆறுபேர் காளிதாசை, இரும்புக்கம்பி உருட்டுக் கட்டையால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள் ளனர். இதில் அவர் காயமடைந்தார். அவரது புகாரில், சக்திவேல், ரஞ்சித், முருகன் ஆகிய மூவரை வீரபாண்டி எஸ்.ஐ., லதா கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை