கல்வி வளர்ச்சி தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி வளர்ச்சி தினம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செம்பட்டி, ஆதிலட்சுமிபுரம் பிரிசம் மெட்ரிக் பள்ளியில், முதல்வர் சத்தியசீலி தலைமையில் கல்வி வளர்ச்சி தின விழா நடந்தது. தாளாளர் முருகேசன், செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். ஒரு மாணவி புத்தகம் படிப்பது போன்ற, 70 அடி நீளம், 50 அடி அகல ஓவியத்தை, மாணவர்கள் வரைந்திருந்தனர்.சின்னாளபட்டி:இங்குள்ள சேரன் வித்யாலயா பள்ளி விழாவுக்கு முதல்வர் திலகம் தலைமை வகித்தார். காமராஜர் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். விழாவின் சிறப்பு, கொண்டாடுவதன் நோக்கம் குறித்து, முதல்வர் பேசினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒட்டன்சத்திரம்: காப்பிளியபட்டி பிரிமியர் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விழாவில் முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார். துணை முதல்வர் டால்பின்தேவி முன்னிலை வகித்தார். மாணவர்கள் காமராஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை நடனம், நாடகம், உரைகள் மூலம் விளக்கினர். ஆசிரியர் செல்வராசு தொகுத்து வழங்கினார். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை