சட்டவிரோத பேனர் ஐகோர்ட் கண்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோத பேனர் ஐகோர்ட் கண்டிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், 'காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில், அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அளித்த புகாரின் மீது, நடவடிக்கை இல்லை' என, கூறியிருந்தார்.நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், 'டிஜிட்டல் பேனர்களை அகற்ற உத்தரவிட்டும், அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நீதிமன்ற உத்தரவுகள், காகித அளவில் தான் உள்ளன; அரசு தரப்பில் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தாலும், அங்கு சென்று பார்த்தால், மீண்டும் அதே நிலை தான் உள்ளது' என, கூறினர்.இந்த மனுவை, தலைமை நீதிபதி அடங்கிய, 'பெஞ்ச்'சுக்கு மாற்ற, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை