சாரணர் இயக்க மாணவிகளுக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாரணர் இயக்க மாணவிகளுக்கு விருது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி, போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாணவிகள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இவர்கள் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான 'ராஜ்யபுரஷ்கார்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.அதனை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ,கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரிடமிருந்து, பள்ளி சாரண இயக்க மாணவிகள் அனிதா ஸ்ரீ, கீர்த்தனா பெற்றுக்கொண்டனர். இதற்கு காரணமான சாரணர் இயக்க ஆசிரியை சாரதா, மாணவிகளை பள்ளி தாளாளர் வேணுகோபால், தலைமையாசிரியை ஜக்கம்மாள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X