வீட்டில் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் நகை திருட்டு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிப்பட்டி, க.விலக்கு அருகே உள்ள கோல்டன்சிட்டி' பகுதியில் வசித்து வருபவர் சியாமளா, 39. க.விலக்கு மின்துறை அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கணவர் நாகராஜ், கேரளா மூணாறில் கல்லுாரி பேராசிரியராக உள்ளார்.நேற்று முன்தினம் சியாமளா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். வீட்டின் கதவு, பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய் தனர். போலீஸ் மோப்பநாய் சோதனை செய்தது. க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை