கொசு மருந்து தெளிப்பு பணிகள் பேரூராட்சிகளில் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொசு மருந்து தெளிப்பு பணிகள் பேரூராட்சிகளில் நிறுத்தம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கம்பம், கொசு மருந்து கொள்முதல் மற்றும் தெளிப்பிற்கு அதிக டீசல் தேவைப்படுவதால் பேரூராட்சிகளில் கொசு மருந்து 'ஸ்பிரே' செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்த ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் கொசு மருந்து தெளிப்பு, அபேட் ஊற்றுதல், நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. ' டெங்கு ' குறைந்ததால் அப்பணிகள் நிறுத்தப்பட்டது.ஆனால் தற்போது பல கிராமங்களில் 'டெங்கு ' துளிர்விட்டுள்ளது. 'டெங்கு 'ஒழிப்பு பணியில் முக்கிய அம்சமான கொசு மருந்து ஸ்பிரே செய்வதாகும். ஊராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும் கொசு மருந்தை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் வழங்கி வந்தார். தற்போது வழங்குவ தில்லை. மேலும் அதனை ஸ்பிரே செய்வதற்கு தேவையான டீசலை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் சொந்த செலவி வாங்கிக்கொள்ள வேண்டும்.இதனால்தான் சமீபகாலமாக பேரூராட்சிகளில் கொசுமருந்து தெளிப்பு கைவிடப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தமபாளையம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உள்ளிட்ட பேரூராட்சிகளில் கொசு மருந்து தெளிப்பதில்லை. உத்தமபாளையத்தில் பெரியசெட்டியார் வீதி, பள்ளிவாசல் வீதி, வாட்டர்டேங்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கொசு அதிமாக உற்பத்தியாகி பல தொற்று நோய்களை பரப்பி வருகிறது. மீண்டும் 'டெங்கு' தலை துாக்கவிடாமல் தடுக்க தேவையான நிதி ஒதுக்கி இப்பணி களை விரைவு படுத்த சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை