ராமர் கோவிலுக்கு நிலம் தர ஷியா வக்பு வாரியம் விருப்பம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு நிலம் தர ஷியா வக்பு வாரியம் விருப்பம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

'ராம ஜென்ம பூமி வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கிடைத்த, மூன்றில் ஒரு பங்கு நிலம், எங்களுக்கே சொந்தம்; அதை, ராமர் கோவில் கட்ட தானமாக அளிக்க விரும்புகிறோம்' என, மத்திய ஷியா வக்பு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உ.பி., மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010, செப்டம்பரில் தீர்ப்பளித்தது.
அதில், 'சர்ச்சைக்குரிய இடம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மனுதாரர்களான, ஹிந்து மஹாசபா, ஹிந்து அமைப்பான நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்றும் பிரித்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது.இது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மத்திய ஷியா வக்பு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி, மிர் பாகி என்ற, ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவரால் கட்டப்பட்டது. எனவே, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மூன்றாவது பங்கு, எங்களுக்கே சொந்தம்.இந்த பங்கை, ஹிந்துக்கள், ராமர் கோவில் கட்ட தானமாக அளிக்க விரும்புகிறோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை பேணவேண்டும் என்ற நோக்கில், இந்த நிலத்தை, ஹிந்துக்களுக்கு தானமாக அளிக்கிறோம்.

அந்த இடத்தில் இருந்த மசூதியை, சற்று தொலைவில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதியில் புதிதாக கட்டிக் கொள்ளலாம்.இவ்வாறு ஷியா வக்பு வாரியம் கூறியுள்ளது.இதற்கு, பிரதான மனுதாரர், எம்.சித்திக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜீவ் தவான் எதிர்ப்பு தெரிவித்தார்.ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கே.பராசரன், ''ஹிந்துக்களுக்கு, அயோத்தி போன்ற தலங்கள் புனிதமானவை.

''ஆனால், முஸ்லிம்கள், மெக்கா, மதினா ஆகிய இடங்களுக்கு புனித பயணம் செல்கின்றனர். முஸ்லிம்களுக்கு, மசூதிகள் முக்கியமானவை அல்ல,'' என்றார்.இந்த வழக்கின் விசாரணை, 20ல், மீண்டும் நடக்கவுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
14-ஜூலை-201814:18:48 IST Report Abuse
Mohammed Abdul Kadar முதலாவதாக ஷியாக்கள் முஸ்லிம்களே அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை