தெர்மாகோலுக்கு வருகிறது தடை| Dinamalar

தெர்மாகோலுக்கு வருகிறது தடை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:மஹாராஷ்டிராவில், விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, 'தெர்மாகோல்' பயன்படுத்துவதற்கு, மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.இந்த விழாவின் போது, அமைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலைகள், வளைவுகள், பந்தல்கள் அமைக்க, தெர்மாகோல் பயன்படுத்தப்படும். மஹாராஷ்டிர மாநில அரசு, பிளாஸ்டிக், தெர்மா கோலுக்கு சமீபத்தில் தடை விதித்தது.
இந்நிலையில், தெர்மாகோல் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் மாசு காரணமாக, இந்த ஆண்டு முதல், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தெர்மாகோல் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை