மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்காக 41 ஓட்டுச்சாவடிகள் புதிதாக அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்காக 41 ஓட்டுச்சாவடிகள் புதிதாக அமைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேனி, ''லோக்சபா தேர்தலுக்காக மாவட்டத்தில் 41 ஓட்டுச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன,''என, கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி மறுசீரமைப்புப் பணிகள் முடிந்து நிலையில் , அதுகுறித்து அனைத்துக் கட்சி கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் , கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எம்.பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., (பொ) நாகஜோதி, கோட்டாட்சியர்கள் சென்னியப்பன், ஜெயப்ரிதா, அதிகாரிகள் பங்கேற்றனர்.கலெக்டர் கூறியதாவது:நகரங்களில் 1,400 வாக்காளர்களுக்கு அதிகமாக, கிராமப்புறங்களில் 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடிகள் சேதம் உள்ளிட்ட காரணங்களால் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி ஆண்டிபட்டி சட்டசபைத் தொகுதியில் ஏற்கனவே உள்ள 300 ஓட்டுச்சாவடிகளுடன் 13 புதிய ஓட்டுச்சாவடிகளும், பெரியகுளத்தில் 282 ஓட்டுச்சாவடிகளுடன், 14 புதிய ஓட்டுச்சாவடிகள்,போடியில் ஏற்கனவே உள்ள 309 ஓட்டுச்சாவடிகளுடன் 5 புதிய ஓட்டுச்சாவடிகளும், கம்பத்தில் 286 ஓட்டுச்சாவடிகளுடன் 9 புதிய ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள் ளன. நான்கு சட்டசபைத் தொகுதிகளிலும் ஏற்கனவே இருந்த 1,177 ஓட்டுச்சாவடிகளுடன், 41 புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1,218 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜூலை 18 க்குள் தங்களின் கருத்துக்களை, ஆட்சேபனைகளை, தாலுகா, கோட்டாச்சியர், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாக வழங்கலாம், என்றார். மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் - தே.மு.தி.க.,- தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., -காங்., -கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை