'சார்... இது வங்கி இல்லை... டி.எஸ்.பி., அலுவலகம்' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சார்... இது வங்கி இல்லை... டி.எஸ்.பி., அலுவலகம்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெரியகுளம், பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலக கட்டடம் செங்கல் வடிவ சிவப்பு நிறத்தில் இல்லாததால், வங்கி வாடிக்கையாளர்கள் அங்கு சென்று 'இது ஸ்டேட் வங்கியா எனக் கேட்கின்ற னர். இதனால் தினமும் போலீசார் புலம்பி வருகின்றனர்.பெரியகுளம் டி.எஸ்.பி., அலுவலகம் வடகரை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில், நகராட்சி வணிகவளாகத்தில் செயல்படுகிறது. டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு உட்பட்ட தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய 4 போலீஸ்ஸ்டேஷன்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்கும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு கூட்டம் அடிக்கடி நடக்கும்.போலீஸ்ஸ்டேஷன்களில் தீர்க்கப்படாத பிரச்னைகளை, பொதுமக்கள் தினமும் 30க்கும் அதிகமானோர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனுக்களாக கொடுத்து வருகின்றனர். அவர்களிடம் நட்புறவை வளர்க்கும் இடமாகவும் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவலக வளாகத்தில் மேல்பகுதியில் வடகரை ஸ்டேட் வங்கி கிளை செயல்படுகிறது. இரு அலுவலகமும் ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. போலீஸ் ஸ்டேஷன் சென்று இது ஸ்டேட் வாங்கியா என வாடிக்கையாளர்கள் கேட்கின்ற னர். அதுபோல அங்கு செல்ல வேண்டியவர்கள் வழிமாறி வங்கிக்கு வருகின்றனர். இதனால் இருதுறையினரும் 'நாங்கள் அவர்கள் இல்லை' என்ற பாணியில் தினமும் பதில் கூறுகின்றனர்.பல மாதங்களாக நடந்து வரும் பிரச்னைக்கு தீர்வு எட்டவில்லை. சமீபத்தில் நகராட்சி நிர்வாகம், இரு அலுவலகங்களுக்கும் ஒரே நிறத்தில் பெயின்ட் அடித்துள்ளது. குழப்பத்திற்கு தீர்வு காண டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு செங்கல் வடிவ சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்ற னர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை