சொட்டுநீர் பாசன இலக்கை எட்டுவதில் அதிகாரிகள் திணறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசன இலக்கை எட்டுவதில் அதிகாரிகள் திணறல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம், சொட்டுநீர் பாசன சிறப்பு முகாமில் கணிசமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டபோதும், தோட்டக்ககலைத்துறை, வேளாண் துறை அதற்கான இலக்கை எட்ட முடியாமல் திணறுவதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.விவசாயத்தில் தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு அறிவுறுத்துகிறது.இதற்கென தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் துறைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு உதவி இயக்குநருக்கு350 எக்டேர் இலக்கு தரப்பட்டது. ஆனால் ஜி.எஸ்.டி., பிரச்னையால் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் வரியை அரசே ஏற்றுக் கொண்டபோதும் இலக்கை எட்டமுடியவில்லை.மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக் அரசு கேட்டுக் கொண்டது.அதன்படி ஜூலை 5 ல் தேனிமாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒருங்கிணைந்த சொட்டுநீர் பாசன சிறப்பு முகாம் நடந்தது. வேளாண் , தோட்டக்கலை, வேளாண் பொறியியல், சொட்டுநீர் பாசன கருவி தயாரிப்பு நிறுவனங்கள், வருவாய்த்துறை இணைந்து இந்த முகாமை நடத்தியது. கணிசமான விவசாயிகள் விண்ணப்பங்களை வழங்கினர். எனினும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு நிர்ணயம் செய்த இலக்கை இன்னும் எட்ட முடியவில்லை.முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பகிர்ந்து கொள்வதில், வேளாண், தோட்டக்கலைத்துறைகளுக்கு இடையே பலஇடங்களில் சிக்கல் நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை