திருச்செந்தூர் கோவிலில் நிர்வாக சீர்கேடு எச்சரிக்கை விடுத்தது உயர் நீதிமன்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் நிர்வாக சீர்கேடு எச்சரிக்கை விடுத்தது உயர் நீதிமன்றம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை:திருச்செந்துார் கோவில் நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனத்திற்கு பக்தர்களிடம், சிலர் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வருகை பதிவு

கோவில் ஊழியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப் பதிவை நிறுவ அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள், ஜூன் 1ல் பிறப்பித்த உத்தரவில், 'கோவிலில் சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, பூஜைகள் செய்ய வேண்டும். பக்தர்களிடம் பூசாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என, எச்சரிக்க வேண்டும்.'கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோவில் வளாகத்தில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.

'பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதை நிறைவேற்றியது பற்றி கோவில் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

ஒளிரும் பலகை

நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு நேற்று விசாரித்தது.கோவில் நிர்வாக அலுவலர் பாரதி தாக்கல் செய்த அறிக்கையில், 'நீதிமன்ற உத்தரவுப்படி ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டன. 'இதைப் பார்த்த, அமெரிக்க பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அதை இத்துடன் இணைத்துஉள்ளோம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது' என, கூறியிருந்தார்.

நீதிபதிகள் உத்தரவில், 'அறிக்கை திருப்திகரமாக இல்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், கடுமையாக கருதி, உத்தரவு பிறப்பிக்கப்படும்.'ஜூன் 1ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி, ஜூலை 23ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, எச்சரித்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை