மனித உரிமை மீறல் வழக்குகள்: கடலூரில் நீதிபதி விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனித உரிமை மீறல் வழக்குகள்: கடலூரில் நீதிபதி விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கடலுார்: திருக்கோவிலுாரில் இருளர் பெண்களை, போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணை வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.மனித உரிமை மீறல் தொடர்பாக தமிழக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வரும் புகார்களின் பேரில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டந்தோறும் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.அதில் கடலுார், விழுப்பரம் மாவட்டங்களில் இருந்து வரப்பெற்ற 30க்கும் மேற்பட்ட புகார்கள் மீதான விசாரணை நேற்று கடலுார் சுற்றுலா மாளிகையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்தது.இந்த விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த டி.மண்டபத்தைச் சேர்ந்த இருளர் பெண்கள் நான்கு பேரை கடந்த 2011ம் ஆண்டு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களிடம், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்த மாணவர் பாரத், 15, மர்ம மரணம் குறித்து விடுதி ஊழியர்கள் மீதான புகார் உள்ளிட்ட இரு மாவட்டங்களையும் சேர்ந்த 80 வழக்குகள் நேற்று விசாரிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையில் விழுப்புரம் டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், குருமூர்த்தி, குமரய்யா, எழிலரசி, மைக்கேல் இருதயராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பொன்மரம், விநாயகமூர்த்தி, கவியரசு, உட்பட இரு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் ஆஜராகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை