நாய்கள் கடித்து புள்ளி மான் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தண்ணீர் தேடி வந்த பெண் புள்ளி மானை, நாய்கள் கடித்ததால், பரிதாபமாக உயிரிழந்தது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர், ஓங்கூர், ஆவணிப்பூர் பகுதிகளில் பசுமை மாறா காடுகள் நிறைந்த வனவிலங்கு பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில், புள்ளிமான், வெளிமான், காட்டுப்பன்றி, நரி, முயல் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.இப்பகுதியில், மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டதால், வன விலங்குகளுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், காட்டுப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் தண்ணீர் தேடி, நகர பகுதி நோக்கி படையெடுக்கின்றன. இந்நிலையில், நேற்று காலை, ஒலக்கூர் அடுத்த பாங்கொளத்தூரில் உள்ள சின்னகுளத்தில் இரண்டு வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது.அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள், மானை சுற்றி வளைத்து கடித்து குதறின. அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், நாய்களை விரட்டியுள்ளார். படுகாயமடைந்த புள்ளி மான், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த மான் உடலை, திண்டிவனம் வனத்துறை வனப்பாதுகாவலர் ஏழுமலையிடம், பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை