'பிரின்ட் அன் பேக்' கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிரின்ட் அன் பேக்' கண்காட்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை மடீட்சியா சார்பில் வேலம்மாள் மருத்துவ கல்லுாரி ஐடாஸ் கட்டடத்தில் ஜூலை 19 காலை 11:00 மணிக்கு 'பிரின்ட் அன் பேக் 2018' கண்காட்சி துவங்கி ஜூலை 22 வரை நடக்கிறது.மடீட்சியா தலைவர் முருகன் கூறியதாவது: அச்சுத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களை நுகர்வோர் அறிந்து கொள்ள கண்காட்சி உதவும். 125க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்திய அளவில் உள்ள பிரின்டிங், பேக்கேஜிங் இயந்திர உற்பத்தியாளர்கள் தங்கள் இயந்திரங்களை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளிக்கிறார்கள். கண்காட்சியை பார்வையிட மாட்டுத்தாவணியில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம், என்றார். கண்காட்சி தலைவர் லட்சுமி நாராயணன், துணைத் தலைவர்கள் ஆனந்தன், அசோக் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை