மின் இணைப்பு வழங்க ரூ.5000 லஞ்சம் வணிக உதவியாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பு வழங்க ரூ.5000 லஞ்சம் வணிக உதவியாளர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காட்டுமன்னார்கோவில்: கடலுார் அருகே, லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி அடுத்த வெச்சூரைச் சேர்ந்தவர் தமிழினியன், 45; தற்போது, காட்டுமன்னார்கோவிலில் வசித்து வருகின்ற இவர், லால்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.வீராணம் ஏரிக்கரை கிராமமான கொள்ளுமேட்டைச் சேர்ந்தவர் இளஞ்செழியன், 35. இவர் தனது பெட்டிக் கடைக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கடந்த 2017ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், லால்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார். மின் இணைப்பு கொடுப்பதற்கு, தமிழினியன் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து இளஞ்செழியன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன பவுடர் தடவிய 5000 ரூபாயை நேற்று காலை எடுத்துச் சென்ற இளஞ்செழியன், அலுவலகத்தில் இருந்த தமிழினியனிடம் கொடுத்தார்.அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த டி.எஸ்.பி., மெர்லின் ராஜாசிங், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், தமிழினியனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை