'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பிய ஆபாச தகவலால் விபரீதம், கடலூர் அருகே கோஷ்டி மோதல்: வீட்டுக்கு தீ வைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பிய ஆபாச தகவலால் விபரீதம், கடலூர் அருகே கோஷ்டி மோதல்: வீட்டுக்கு தீ வைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கடலுார்: கடலுார் அருகே 'வாட்ஸ் ஆப்'பில் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தீ வைத்ததில், 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் அடுத்த சேடப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் வெற்றிவேல், 20; இவர், அதே பகுதியைச் சேர்ந்த சக நண்பர்கள் முருகன் மகன் ஆனந்தஜோதி, 27, உள்ளிட்ட சிலருக்கு 'வாட்ஸ் ஆப்'பில் அடிக்கடி ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆனந்தஜோதி மற்றும் அவரது தரப்பினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வெற்றிவேலின் வீட்டிற்கு சென்று அவரது தாய் சுமதியிடம் நியாயம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.அப்போது சுமதி, அவரது உறவினர் கார்த்திக், 29, ஆகியோரை ஆனந்தஜோதி மற்றும் அவரது தரப்பினர் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், நள்ளிரவு 1:30 மணியளவில் ஆனந்தஜோதியின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால், அருகில் இருந்த சுமதி, செல்வம் ஆகியோரின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.சுமதி வீட்டில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், அருகில் இருந்த தென்னை மரங்களும் தீப்பிடித்து எரிந்தது. தென்னை மட்டைகள் எரிந்து, அருகில் இருந்த வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் குடிசை வீடுகளின் மீது விழுந்ததால், அவர்களின் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.தகவலறிந்த கடலுார் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில், 6 வீடுகளில் இருந்து ரூ. 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமாகின.இதற்கிடையே ஆனந்தஜோதியின் தாயார் மங்கலம், தனது வீட்டை கார்த்திக் தம்பி விக்னேஷ், 23; அவரது உறவினர் செந்தில்குமார், 33; ஆகியோர் தீ வைத்து எரித்ததாக கடலுார் முதுநகர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதே போல், எதிர் தரப்பில் கார்த்திக் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, இரு தரப்பையும் சேர்ந்த வேலு மகன் முகுந்தன், 18; கிருஷ்ணமூர்த்தி மகன் விஜயகுமார், 23; விக்னேஷ், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். ஆனந்தஜோதி, கருணாகரன், சுரேஷ், அருள் ஆகியோரை தேடி வருகின்றனர்.தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பத்தினரை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X