மனைவியின் கை விரல்கள் 'கட்' 'பாசக்கார' கணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியின் கை விரல்கள் 'கட்' 'பாசக்கார' கணவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: குடும்ப பிரச்னையில், கத்தியால் வெட்டி மனைவியின் கை விரல்களை துண்டாக்கிய, கணவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கள்ளக்கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வளர்குமார், 42. இவரது மனைவி பூங்கொடி, 38; கொணக்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு பொறுப்பாளர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து பூங்கொடி தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில், கொணக்கம்பட்டு, பஸ் நிறுத்தத்தில் இருந்து நேற்று காலை 11:00 மணிக்கு, பஸ்சை விட்டு இறங்கி, பூங்கொடி பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வளர்குமாருக்கும், பூங்கொடிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த வளர்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால், பூங்கொடியின் தலை மற்றும் இரண்டு கை பகுதிகளில் வெட்டினார். இதில், வலது கையின், கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் துண்டாகின. ரத்த வெள்ளத்தில், மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.இதற்கிடையே, மனைவியை வெட்டிய வளர்குமார், மயிலம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை, ரோஷணை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை