மீனவ கிராமங்களுக்கு தனி பஞ்., அரசு பதில் அளிக்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனவ கிராமங்களுக்கு தனி பஞ்., அரசு பதில் அளிக்க உத்தரவு

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:தமிழகத்தில், மீனவ கிராமங்களை, தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
மீனவர் நல அமைப்பின் தலைவர், பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில்,13கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்கு, 608 மீனவ கிராமங்கள் உள்ளன. 9..24லட்சம் மீனவர்கள், அங்கு வசிக்கின்றனர். மீனவர்களை, ஆதிதிராவிட சமூகத்தில் சேர்க்கும்படி, மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. அவர்கள் வசிக்கும் பகுதிகளை தனியாக பிரித்து, தனி தொகுதி மற்றும் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரைகளை, அரசு பரிசீலிக்கவில்லை. மீனவ கிராமங்களை, தனி கிராம பஞ்சாயத்தாக வரையறை செய்யவில்லை. கடலோர மீனவ கிராமங்களை, கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க கோரிய மனுவை, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி இருப்பதாக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, உள்ளாட்சி தேர்தலுக்கு முன், எங்கள் மனுவை பரிசீலித்து, மீனவ கிராமங்களை, தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எல்.பி.மவுரியா ஆஜரானார்.மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஆக.,17க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
leon - dayville,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201801:01:37 IST Report Abuse
leon What is there, for the court to consult the government? Very well every costal village along the Tamilnadu sea coast as independent panchayathu and in the future every e, every religion, every community, every street, every work based society etc.. etc will demand for a separate independent panchaytu. I think this will be very good lead to develop all the e, religion, class-people and society. The job opportunity will be plenty, more presidents, more job. Let us have many panchathu presidents, offices, MLAs MPs. Wonderful idea. Please, let the honourable court, with out consultation recommend and approve.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X