குற்ற சம்பவங்களை தடுக்க ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குற்ற சம்பவங்களை தடுக்க ஆலோசனை கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க வங்கி அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சிதம்பரம் நகரில் கடந்த சில மாதங்களாக திருட்டு, வழிப்பறி, நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சிதம்பரம் குற்றப் பிரிவு போலீசார் சார்பில் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வங்கி அதிகாரிகள், நகைக் கடை உரிமையாளர்கள் போன்றவர்களிடம் குற்றச் சம்பவம் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் நடந்தது.கூட்டத்திற்கு டவுன் இன்ஸ்பெக்டர் குமார் தலைமை தாங்கினார். குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் வரவேற்றார். இதில் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகள், நகைக் கடை உரிமையாளர்களின் பிரதிநிதிகள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் வங்கிகள், நகைக்கடைகள் முன் கேமராக்கள் பொருத்த வேண்டும். பணம் எடுத்துச் செல்வோர் கவனமாக எடுத்து செல்ல வேண்டும். நகரில் குற்றவாளிகள் என தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X