திருவள்ளுவர் கலை கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்பு துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் கலை கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்பு துவக்க விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடலுார்: குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நடந்தது.உதவி பேராசிரியர் வேல்முருகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராம்நாத் தலைமை தாங்கினார். நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன், பொருளாளர் ராமலிங்கம், செயலர் ராஜாமணி, தாளாளர் ராஜாராம், ஆலோசகர் ஆசைத்தம்பி, ஆசிரியர் பயிற்சி கல்லுாரி முதல்வர் சிங்காரவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.என்.எல்.சி., கல்வி விளையாட்டு மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் நெடுமாறன், சேரமான், அண்ணாமலை பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் கொளஞ்சிநாதன், விவேகானந்தர் பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் ஆனந்த முதலியார் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.வேதியியல் துறைத்தலைவர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர் மணிவண்ணன், உயிர் வேதியியல் துறை தலைவர் சிவா, நுண்ணுயிரியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன், நாட்டு நலத்திட்ட அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை