டெங்கு விழிப்புணர்வு முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சி.எஸ்.ஜெயின் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாளாளர் மகாவீர்சந்த், பார்மசி கல்லுாரி நிர்வாகி அபிராமி முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் செல்வகுமார் வரவேற்றார்.மாவட்ட தொற்று நோய் தடுப்பு அலுவலர் மனோகரன், மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி ஆகியோர் டெங்கு நோய் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினர்.எஸ்.பி.ஜி., வித்யாலயாவில் நடந்த முகாமிற்கு, பள்ளி தாளாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். முதல்வர் பினேஷ்ஜான் வரவேற்றார். தொடர்ந்து த.வீ.செ., மேல்நிலைப் பள்ளி, மாமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், கவியரசன், சவுந்திரராஜன், குணபாரதி, கிராம சுகாதார செவிலியர் லில்லிகிரேஸ்மேரி உள்ளிட்ட சுகாதார குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை