கிராமப்புற பெண்களுக்கு மேம்பாட்டு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமப்புற பெண்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெய்வேலி: என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு துறை, பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் மகளிர் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்பு நெய்வேலியில் துவங்கியது.நெய்வேலி வட்டம்- 9ல் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் மகளிருக்கான முதல் கட்ட தையல் பயிற்சியை மன்றத்தின் தலைவி யோகமாயா ஆச்சார்யா மற்றும் நெய்வேலி மகளிர் மன்றப் புரவலர் சாந்தி விக்ரமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில், என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு, கல்வி மற்றும் விளையாட்டுத் துறை முதன்மை பொது மேலாளர், மோகன், சமூக பொறுப்புணர்வுத்துறை பொது மேலாளர் ராமச்சந்திரன், துணை பொது மேலாளர் ரமேஷ், கூடுதல் தலைமை மேலாளர் சோமசுந்தரம், உதவி செயற் பொறியாளர் பாலச்சந்திரன் பங்கேற்றனர்.வரும் வாரத்தில், அழகுகலை, ஜெர்மன் நகை உருவாக்குதல், இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி போன்ற பயிற்சிகளும் துவங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை