மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிதம்பரம்: ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் குழந்தை கடத்தல் தடுப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, சுற்றுப்புறத் துாய்மை, பிளாஸ்டிக் தவிர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளின் மனித சங்கிலி நிகழ்ச்சி மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். துணைவேந்தர் முருகேசன் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகம், பல் மருத்துவப் புல முதல்வர் ராஜசிகாமணி, யூத் ரெட் கிராஸ் அமைப்பு அய்யப்பராஜா, திட்ட அலுவலர் தாமரைச்செல்வி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை