சீரான குடிநீர் வழங்கக்கோரி வீடுகளில் கறுப்பு கொடியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரான குடிநீர் வழங்கக்கோரி வீடுகளில் கறுப்பு கொடியேற்றம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெண்ணாடம்: விருத்தாசலம் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி, காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணத்தில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அதில், ஒரு குடிநீர் தொட்டியின் மோட்டார் கடந்த 2 வாரங்களுக்கு முன் பழுதானது. அதனை சீரமைக்காததால் மற்றொரு மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 9:00 மணியளவில் தங்களின் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி, காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை