குறையுது மாடுகள் வளர்ப்பு வளருது ஆடுகள் வளர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறையுது மாடுகள் வளர்ப்பு வளருது ஆடுகள் வளர்ப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம், திருமங்கலம் தாலுகா உட்பட மதுரை மாவட்ட பகுதிகளில் பசு மாடுகளை பராமரிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள், ஆடு, கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 13 ஒன்றியங்களிலும் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி 15 ஆயிரம் கறவை மாடுகள் இருந்தன. பராமரிப்பில் சிரமம், தீவன பற்றாக்குறை, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலை உயர்வு, கட்டுபடியாகாத பால் விலை போன்றவைகளால் பசுமாடு வளர்ப்பதை விவசாயிகள் கை விடுகின்றனர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் 5 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட 4 ஆயிரம் பால் மாடுகள் குறைவாகவே உள்ளன. ஆடுகள் வளர்ப்பது எளிதாக இருப்பதால் விவசாயிகள் அதில் ஆர்வம் காட்டுகின்றனர். 40 ஆயிரமாக இருந்த ஆடுகள் எண்ணிக்கை தற்போது 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை