204 திட்டங்களில் வீடு விற்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

204 திட்டங்களில் வீடு விற்க தடை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, முறையாக பதிவுக்கு முன்வராத, 204 திட்டங்களில், வீடு வாங்க வேண்டாம்' என, பொது மக்களுக்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 2017 ஜூனில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து, தமிழகம் மற்றும் அந்தமான் நிகோபார் பகுதிகளுக்கான, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டது. இந்த ஆணையத்தில் பதிவு செய்வதற்கான அடிப்படை வரையறைகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, 500க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள், முறையாக விண்ணப்பித்து, பதிவு செய்யப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள், இந்த நடைமுறைக்குள் வராமல் இருந்தன. இதையடுத்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., ஆகியவற்றில் வழங்கப்பட்ட அனுமதிகள் வாயிலாக, திட்டங்களின் விபரங்கள் பெறப்பட்டன.
இதன்படி, தமிழகம் முழுவதும், 204 கட்டுமான திட்டங்களின் உரிமையாளர்கள், ஆணையத்தில் பதிவுக்கு விண்ணப்பிக்காதது, உறுதி செய்யப்பட்டது. இந்நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களில், 'வீடு, வணிக, அலுவலக பகுதிகள் எதையும், யாரும் வாங்க வேண்டாம்' என, பொதுமக்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இத்திட்டங்கள் பட்டியல், ரியல் எஸ்டேட் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை