திருமூலநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமூலநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டையில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமூலநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.அறநிலையத் துறைக்கு சொந்தமான 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமூலநாதர் சமேத மரகதம்மாள் திருக்கோவிலில், திருமூலநாதர், சிவக்கொழுந்தீஸ்வரர், குமரகுருபரர், காலவராய மன்னன் சிலைகள் உள்ளன.இக்கோவிலுக்கு நிலங்கள் மூலம் வருமானம் இருந்தும் துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பராமரிக்கப்படவில்லை. இதனால் கோவில் சிதிலமடைந்து பூஜை செய்ய முடியாமல் அம்மன் சிலைகள் உள்ளிட்ட சிலைகள் திருடுபோனது.இதுகுறித்து அப்பகுதிமக்கள் அறநிலையத்துறை அதிகாரிக்கு புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து திருமூலநாதர் இறைபணி மன்றம் சார்பில் கோவிலில் இருந்த திருமூலநாதர் சிலைகளை அருகில் ெஷட் அமைத்து இளங்கோவில் அமைத்து அங்கு திருமூலநாதர் பிரதிஷ்டை செய்து கடந்த மே 27ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினர்.மே 28ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கி நேற்று 13ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. அதனையொட்டி, 108 சங்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை