புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு கோரிக்கை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெண்ணாடம்: பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வி.சி., நகர துணைச் செயலர் பன்னீர்செல்வம் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.மனு விபரம்:கடந்த 2007ல் பெண்ணாடத்தில் புதிதாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்து ஓரிரு மாதங்களில் மூடப்பட்ட புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கக்கன் குளத்தில் அனுமதியின்றி வண்டல் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை