போலீஸ் செய்திகள்...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விபத்தில் முதியவர் பலிதிருமங்கலம்: விடத்தகுளம் விவசாயி கிச்சனன், 72. நேற்று காலை புல் கட்டு துாக்கி கொண்டு எட்டுநாழிபுதுாரில் இருந்து விடத்தகுளம் செல்லும் ரோட்டில் சென்றார். அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிமோதி தலையில் பலத்த காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.-----கழுத்தை அறுத்து தற்கொலைமேலுார்: மதுரை அருகே வலையங்குளம் பாண்டி மகன் வேல்முருகன், 24. பி.எல்படித்தார். ஜூலை 2 மேலுார் அருகே மலம்பட்டியில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். போலீசார் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். பி.எல்., தேர்வில் நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறாததால் குடும்பத்தினர் சத்தம் போட்டதால் வேல்முருகன் தற்கொலை செய்தது தெரிந்தது.------மணல் திருடியவர் கைதுசோழவந்தான்: சோழவந்தான் எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பேட்டை வைகை ஆற்றுப்பகுதியில்சோதனையில் ஈடுபட்டனர். டூவீலரில் மணல் கடத்தியபசும்பொன்நகர் தீர்த்தத்தை, 33, கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர். தப்பிய பேட்டை ராஜா, சுரேஷ், முத்துகுமார்,பழனிச்சாமி, சங்கங்கோட்டை ரஞ்சித் ஆகியோரைதேடி வருகின்றனர்.போலி பீடிகள் பிடிபட்டனமேலுார்: மேலுார் அருகே மலம்பட்டியில் நேற்றிரவு எஸ்.ஐ., சிவபாலன் தலைமையில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். கார் ஒன்றில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பீடி கட்டுகள் இருந்தன. இதுதொடர்பாக மதகுபட்டி சாகுல்ஹமீதுவிடம்,40, விசாரணை நடக்கிறது.சிறுமியிடம்சில்மிஷம்திருப்பரங்குன்றம்: மதுரை அனுப்பானடி நாகராஜ், 50. அதே பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருப்பரங்குன்றம் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கத்திகுத்து2 பேர் கைதுவாடிப்பட்டி: செம்புக்குடிபட்டி முருகன், 55, ஆறுமுகம் மகன் மருது, 18, பூச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ், 25, ஆகியோர் ஒன்றாக மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சதீஷ் கத்தியால் மருதுவை குத்தி காயப்படுத்தினார். வாடிப்பட்டி போலீசார் சதீஷ், முருகனை கைது செய்தனர்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X