இந்திய கம்யூ., போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விழுப்புரம்: கோடை விழாவிற்கு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிடும் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளதாக இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சரவணன் கூறினார்.விழுப்புரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் கூறியதாவது:கல்வராயன்மலையில் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள், தகுதியில்லாதவர்களுக்கு வழங்க பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பசுமை வீடு, பிரதமர் வீடு கட்டும் திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது. வன உரிமைச்சட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுக்கு பத்து ஏக்கர் நிலம் கொடுத்து, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோடை விழாவிற்கு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை இந்திய கம்யூ., மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் இணைந்து முற்றுகையிடுவோம் என அறிவித்திருந்தோம். இதையடுத்து கலெக்டர் சுப்பிரமணியன் அழைத்து பேசினார்.அப்போது,'பழங்குடியின மக்களுக்காக ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். வேறு எந்த மலைப்பகுதியிலும் இல்லாத வகையில் ேஷர் ஆட்டோ கொண்டு வந்துள்ளோம்.வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதற்கு இணங்க முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.வெள்ளிமலை சாலை முதல் சின்ன திருப்பதி வரை 30 கிலோ மீட்டர் துாரம் தார் சாலை வனத்துறையால் தடைபட்டுள்ளது. வனத்துறையிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் கூறியிருந்தார். ஒரு வருடம் கடந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாதி சான்றிதழ் காலம் கடத்தி வழங்கப்படுகிறது. போலீஸ் உடந்தையுடன் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுத்து மறுவாழ்வு திட்டத்தில் அவர்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பழங்குடியின மக்கள் சங்க மாநிலத்தலைவர் வெங்கடேசன், துணைச்செயலாளர் சின்னசாமி, இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் கோதண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை