மதுரைக்கு கிடைத்தது 'ஆறுதல்'தினமலர் செய்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரைக்கு கிடைத்தது 'ஆறுதல்'தினமலர் செய்தி எதிரொலி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு 'புதுமை பள்ளி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கணினி வழியில் சிறப்பாக கற்பித்தலுக்காக கனவு ஆசிரியர் விருதும், அடிப்படை வசதி மற்றும் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. மதுரைக்கு 6 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகள் மட்டும் அறிவிக்கப்பட்டன. இன்று (ஜூலை 14) விருதுகள் வழங்கப்படும் நிலையில் ஜூலை 12 வரை மதுரைக்கு புதுமை பள்ளி விருது அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று பி.அம்மாபட்டி அரசு மேல்நிலை பள்ளியை, 'புதுமை பள்ளி'யாக கடைசி நேரத்தில் கல்வித்துறை அறிவித்தது.ஆசிரியர்கள் கூறுகையில், 'அனைத்து மாவட்டங்களிலும் நான்கு பள்ளிகள் தேர்வான நிலையில் மதுரைக்கு 'ஆறுதலுக்காக' ஒன்றை தேர்வு செய்துள்ளனர். தகுதியான பள்ளிகளை தேர்வு செய்யாததும், அரசியல் சிபாரிசால் எழுந்த குழப்பமும் தான் காரணம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X