சீரமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி பட்டியல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி பட்டியல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளுக்கு சீரமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி பட்டியல் இறுதி செய்தல் தொடர்பான, அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்டத்தில், சட்டசபை தொகுதிகளுக்கு சீரமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் வரைவுப்பட்டியல், கடந்த 2ம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்டத்தில் ஏற்கனவே 3223 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளில் கிராமப்புறங்களில் உள்ள ஓட்டுச்சாவடியில் 1200க்கு மேற்பட்ட வாக்காளர்களும், நகர்புற ஓட்டுச்சாவடியில் 1400க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரித்தல் மற்றும் ஓட்டுச்சாவடி இடமாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டிவனம் , திருக்கோவிலுார் தலா ஒரு ஓட்டுச்சாவடி, விழுப்புரம் 2 ஓட்டுச்சாவடி என புதிதாக 4 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.இப்பட்டியல் மீது கோரிக்கை, ஆட்சேபனை மனுக்கள் அளிக்க விரும்பினால், கடந்த 9 ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே இப்பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் பேசினார்.கூட்டத்தில், சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, மெர்சிரம்யா, காங்., நகர தலைவர் செல்வராஜ், அ.தி.மு.க., நகர செயலாளர் பாஸ்கரன், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, பா.ஜ., மாவட்ட தலைவர் வினாயகம், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சரவணன், பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, தே.மு.தி.க., மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை