குப்பையை சேகரிக்க வந்தாச்சு வாகனங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையை சேகரிக்க வந்தாச்சு வாகனங்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை மாநகராட்சியில் வீடுகளில் இருந்து தரம் பிரித்து வழங்கப்படும் குப்பைகளை சேகரிக்க கூடுதல் பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.மாநகராட்சியில் ஏற்கனவே 5 வாகனங்களும், தனியார் பங்களிப்பில் 2 வாகனங்கள் உள்ளன. தற்போது கே.கே.நகர் ஐ.டி.பி.ஐ., வங்கி கிளை சார்பில் 2.94 லட்சம் ரூபாயில் 2 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மாநகராட்சியின் சுகாதாரப் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன. இதில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வழிவகையுள்ளன. இந்த வாகனங்கள் சம்பந்தமூர்த்தி தெரு, தலைவிரிச்சான் சந்து, டவுன்ஹால் ரோடு மற்றும் குறுக்குத் தெருக்களில் பயன்படுத்தப்படும்.இந்த வாகனங்களை கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார். ஐ.டி.பி.ஐ., வங்கி கே.கே.நகர் கிளை மண்டல தலைவர் அபர்ணா, கிளை தலைவர் வினோத், உதவி கமிஷனர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ.,சித்திரவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை