பள்ளிக் கட்டடம் திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக் கட்டடம் திறப்பு விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலம்: மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் கிராமத்தில் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் திறப்பு விழா நடந்தது.மயிலம் ஒன்றியம், அவ்வையார்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.6 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் மனுகாந்தி, மயிலம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சேகரன் முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., முனுசாமி வரவேற்றார்.தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். இதில், டி.ஆர்.ஓ., பிரியா, எம்.பி.,க்கள் ராஜேந்திரன், ஏழுமலை, எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சக்கரபாணி, அ.தி.மு.க., முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் புலியனுார் விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திண்டிவனம் தாசில்தார் கீதா, பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணி, வருவாய் ஆய்வாளர் விமல்ராஜ், வி.ஏ.ஓ., நரசிம்மன், ஆசிரியர் வேல்வேல்முருகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். உதவி தலைமையாசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை