ஆறு மாதங்கள்; 190 'டிரான்ஸ்பர்'கள் அலறும் ஆவின் ஊழியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு மாதங்கள்; 190 'டிரான்ஸ்பர்'கள் அலறும் ஆவின் ஊழியர்கள்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை ஆவினில் ஆறு மாதங்களில் 190 ஊழியர்கள் 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.ஆவின் மெயின் அலுவலகத்தில் பேக்டரி பிரிவில் பால் பேக்கேஜ், இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பால் பவுடர் மற்றும் , வெண்ணெய் தயாரிப்பு, தயிர் மோல்டிங், நிர்வாக பிரிவில் பால் உற்பத்தி, கால்நடை மருத்துவ பிரிவு, ஆப்பரேட்டர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 450 ஊழியர்கள் உள்ளனர். பொது மேலாளராக ஜெயஸ்ரீ பொறுப்பேற்றதும் நிர்வாக காரணம் என ஆறு மாதங்களில் 190 பேரை 'டிரான்ஸ்பர்' செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊழியர்கள் கூறுகையில், "அதிகாரிகளுக்கும் பொது மேலாளருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதை மனதில் கொண்டு ஊழியர்களை பொது மேலாளர் 'டிரான்ஸ்பர்' செய்கிறார். ஆறு மாதங்களில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க., உட்பட சங்க நிர்வாகிகளும் தப்பவில்லை," என்றனர்.பொது மேலாளர் கூறுகையில், "நிர்வாகம் சிறப்பாக செயல்பட ஒரு சிலர் 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டனர். 190 'டிரான்ஸ்பர்' என்பது தவறு. ஒரே அலுவலகத்திற்குள் வெவ்வேறு பிரிவுகளுக்குள் 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை