அவமதிப்பு வழக்கு முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவமதிப்பு வழக்கு முடிவு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மேலுார் கத்தப்பட்டி பாலு. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகன்மலைச்சாமி 2007 ல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். எனக்கு ஓய்வூதியம் அல்லது குடும்பத்தில் ஒருவருக்குகருணை வேலைகோரி அரசுக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. நடவடிக்கை இல்லை. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக இருந்தமுருகேஸ்வரி மீது நீதிமன்றஅவமதிப்புநடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.முருகேஸ்வரிக்குவாரன்ட் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் நேற்று விசாரித்தார். முருகேஸ்வரி மற்றும் தற்போதைய ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகசெல்வி ஆஜராகினர். அரசு கூடுதல் தலைமைவழக்கறிஞர்,''நீதிமன்ற உத்தரவைநிறைவேற்றி, மனுதாரருக்குஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வாரன்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்,'என மனு செய்தார். இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X