காணை அருகே திருட்டு போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணை அருகே திருட்டு போலீசார் விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஆயந்துாரை சேர்ந்தவர் முருகன் மனைவி அலமேலு, 37; இவர், கடந்த 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, பண்ருட்டி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு திரும்பி வந்துபார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, 7 சவரன் நகை மற்றும் 74 ஆயிரம் ரூபாய் பணத்தை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை