'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்களுக்கு உணவு எடுத்து செல்ல அனுமதி| Dinamalar

'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்களுக்கு உணவு எடுத்து செல்ல அனுமதி

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாக்பூர்:'மஹாராஷ்டிராவில், 'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்களுக்கு உணவுப் பொருட்களை, மக்கள் எடுத்துச் செல்லலாம்' என, மாநில அரசு அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனாகூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில், சமீபத்தில் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டதாவது:
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு, உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு விற்கப்படும் பொருட்களை தான் வாங்க வேண்டும் என, வற்புறுத்துகின்றனர்.பொருட்களும், இரு மடங்கு அதிகமான விலையில் விற்கப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நடவடிக்கை
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'கூடுதல் விலைக்கு பொருட்களை விற்கும், மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல, மக்களை அனுமதிக்க வேண்டும்'என, மாநில அரசுக்குஉத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று, மஹாராஷ்டிரா சட்டசபையில், இந்தப் பிரச்னை பற்றி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து, உணவுத்துறை அமைச்சர் ரவிந்திரா சவான் கூறியதாவது:மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, பொது மக்கள், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கும் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஒரே மாதிரியாக விலை



கூடுதல் விலைக்கு உணவு பொருட்களை விற்கும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, ஆறு வாரத்தில் முடிவு செய்யப்படும். மத்திய அரசின் கொள்கைப்படி, அனைத்து இடங்களிலும், பொருட்களின் விலை, ஒரே மாதிரியாகத் தான் இருக்க வேண்டும்.இவ்வாறு ரவிந்திர சவான் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-201803:54:56 IST Report Abuse
ஆப்பு இப்பவெல்லாம் படம் ரிலீசான மறுநாள் திருட்டு வீடியோ யூ ட்யூபில் வெளியே வருது. சினிமா கொட்டகை ஓனர்கள் வருமானம் டிக்கெட் விற்பதிலிருந்து வருவதில்லை. உணவுப் பொருகளை அதிகவிலைக்கு வைத்து விற்பதனால் வருகிறது. இது தெரியாம நீதிபதிகளும், மனுதாரர்களும் என்னமோ தியேட்டர்காரர்கள் பகல்கொள்ளை அடிக்கிறமாதிரி கேஸ் போடுறாங்க. தியேட்டருக்கு படம் பாக்கப் போறாங்களா இல்லே சாப்பிடப் போறாங்களா? இப்பிடியே போனா இந்த தியேட்டர்களையும் சீக்கிரம் இழுத்து மூடிருவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை