மீன் பிரியர்கள் பீதி மீனவர்கள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன் பிரியர்கள் பீதி மீனவர்கள் கவலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடப்பாக்கம் : மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க, மீனில் கொடிய ரசாயன திரவம் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியானதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.செய்யூரில் கடப்பாக்கம், ஆலம்பரைக் குப்பம், வெண்ணாங்குப்பட்டு, தழுதாலிக்குப்பம், சீக்கனாங்குப்பம், கடலுார் கிராமம், உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் தான். இங்கு பிடிக்கப்படும் மீன்கள், நண்டு, இறால் போன்றவை, மாவட்டத்தின் பல மீன் மார்க்கெட்டுகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்கப்படுகின்றன. ஆழ்கடலில் தங்கி பிடிக்கப்படும் மீன்களை, உடனடியாக விற்பனைக்குக் கொண்டு வர முடியாததால், அவை கெட்டுவிடாமல் இருக்க, 'பாமாலின்' என்ற ரசாயனம் மீன்கள் உடலில் செலுத்தப்படுவதாக, 'வாட்ஸ் ஆப்'பில் செய்தி பரவியது. இதனால், தரமான மீன்களையும் விற்க முடியாமல், மீனவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இது குறித்து கடப்பாக்கம் பகுதி மீனவர்கள் கூறியதாவது: நாங்கள் முதல் நாள் மாலை மீன் பிடிக்கச் சென்று, மறுநாள் அதிகாலையிலேயே கரைக்கு திரும்பி விடுவோம். பிடிக்கப்பட்ட மீன்களை அன்றே விற்பனை செய்து விடுவோம். எனவே, நாங்கள் மீன்களைப் பதப்படுத்துவதில்லை. தற்போது பரவியுள்ள செய்தியால் எங்கள் தொழிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை