கடப்பாக்கத்தில் கடல் சீற்றம்; கடல் அரிப்பு அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடப்பாக்கத்தில் கடல் சீற்றம்; கடல் அரிப்பு அதிகரிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆலம்பரைக்கோட்டை : கடப்பாக்கம் கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றம் காரணமாக, அந்தப் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு வாரமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம், ஆலம்பரைக் குப்பம், தழுதாலிக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இரவு நேரங்களில் கடல் நீர் ஊருக்குள் ஊடுருவத் தொடங்கி உள்ளது. கடலோரம் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகு களை அலை இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த ஐந்து நாட்களாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.எனவே, கடப்பாக்கம், ஆலம்பரக் குப்பம் கடலோரப் பகுதிகளில் துாண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, அரசு உடனே பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர் மீனவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X