பட்டா மாற்ற மனு நடவடிக்கை இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா மாற்ற மனு நடவடிக்கை இல்லை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாலாஜாபாத் : அரசு 'இ - - சேவை' மையங்களில், பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு, வருவாய் துறையினர், உரிய பதில் அளிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி வளாகத்தில், இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு, பட்டா மாறுதல் கேட்டு, பல விண்ணப்பதாரர்கள், 'ஆன்-லைன்' வாயிலாக விண்ணப்பிக்கின்றனர்.இந்த விண்ணப்பங்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, வாலாஜாபாத் தாலுகாவில், சிலரின் விண்ணப்பங்கள், ஓராண்டிற்கு மேலாகியும் வீட்டுமனை பட்டா உட்பிரிவு செய்து, பெயர் மாற்றித்தரவில்லை என, வருவாய் துறை அதிகாரிகள் மீது, புகார் கூறப்படுகிறது.இதனால், கடன் வாங்குவதற்கும், பிற வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமலும், பயனாளிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு, பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை