பயனாளி தேர்வில் முறைகேடு? போலீஸ் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளி தேர்வில் முறைகேடு? போலீஸ் விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோழிப்பண்ணை அமைப்பதற்கு, பயனாளிகளை தேர்வு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று விசாரணை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோழிப்பண்ணை அமைப்பதற்கு, சில பயனாளிகளை தேர்வு செய்தனர். இதில், கால்நடை மருத்துவர்கள் பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதை விசாரிப்பதற்கு, வேலுார் மற்றும் சென்னையிலிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் சென்றனர்.
களக்காட்டூர், முசரவாக்கம், கூரம் ஆகிய கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கூறி, மொபைல் எண் வாங்கினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட முன்னாள் ஊராட்சி தலைவர்களிடம் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். குறிப்பாக, கூரம் கால்நடை மருத்துவமனை கட்டுப்பாட்டில் தேர்வான பயனாளி குறித்து கேட்டறிந்தனர். சரியான பயனாளி இல்லை என தெரிந்தவுடன், அங்கிருந்து, அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை