பள்ளியை தரம் உயர்த்தணும்; பல கிராம மக்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியை தரம் உயர்த்தணும்; பல கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஏனாத்துார் : ஏனாத்துார் உயர் நிலைப்பள்ளியை, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிக்கு, 'நபார்டு' என, அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி மூலமாக, புதிய கட்டடம் கட்டி கொடுக்கப்படுள்ளது. ஐந்தாண்டுகளாக, தொடர்ந்து, 100 சதவீதம் கல்வி தேர்ச்சி அளித்து வருகிறது. இருப்பினும், இப்பகுதி மாணவ- - மாணவியர் மேல் நிலை கல்வி கற்பதற்கு காஞ்சிபுரம் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏனாத்துார் கிராமத்திலிருந்து, காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால், உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. கூடுதல் கட்டணம் செலுத்தி, ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, ஏனாத்துார் உயர் நிலைப்பள்ளியை, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினால் வையாவூர், ஒழையூர், வேடல் உள்ளிட்ட பல கிராமப்புற மக்கள் பயன்பெறுவர் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை