தலைவர் வந்தால் தான் புதிய அட்டை கிடைக்குமா? சமூக தணிக்கை கிராம சபை கூட்டத்தில் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர் வந்தால் தான் புதிய அட்டை கிடைக்குமா? சமூக தணிக்கை கிராம சபை கூட்டத்தில் புகார்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவிந்தவாடி : 'ஊராட்சி தலைவர் வந்தால் தான், புதியவர்களுக்கு, 100 நாள் வேலை அட்டை கிடைக்குமா' என, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை திட்டத்தில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.கோவிந்தவாடி ஊராட்சி தலைவர், கணேசன் தலைமை வகித்தார். வட்டார சமூக தணிக்கை அலுவலர், ஏகாம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வரவு, செலவு கணக்கு வாசித்தார். இவற்றில், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மூன்று வாரத்திற்கு என்.எம்.ஆர்., என, அழைக்கப்படும், வருகை பதிவேடு தணிக்கை, ஆய்வில் சமர்ப்பிக்கவில்லை.வேலைக்கு வராமல் சிலருக்கு, கூலி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் மரக்கன்றுகள் காணவில்லை என, சமூக தணிக்கையில்கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் கூறிய புகார்: கிராமவாசி: அனைவருக்கும் நுாறு நாள் வேலை கிடைக்கணும்.சமூக தணிக்கையாளர்: ஒதுக்கீடு பணிகளுக்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஓரிரு வாரங்களில் பணி துவக்கப்படும்.கிராமவாசி: 30 நாட்களுக்கான கூலி இன்னும் கிடைக்கவில்லை.பணி தளப்பொறுப்பாளர்: உங்களின் வங்கி கணக்கு பதிவுகளை சரிபார்க்கவும். கூலி வரவில்லை எனில், பணம் வழங்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.கிராமவாசி: புதியவர்களுக்கு, 100 நாள் வேலை அட்டை வழங்க மறுக்கின்றனர். கேட்டால், புதிய தலைவர் வந்தால் தான் அட்டை கொடுப்போம் என, கூறுகின்றனர்.சமூக தணிக்கையாளர்: யார் யாருக்கு, 100 நாள் அட்டை வேண்டுமோ, அவர்கள் தனித்தனியாக மனு கொடுக்கலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X