மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தனியார் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவன், மூன்றாவது மாடியிலிருந்து குதித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின், 15 வயது மகன், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள, சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறான்.வழக்கம் போல், நேற்று காலை, வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றான். மாலை, 3:30 மணிக்கு, வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தும் போது, வகுப்பறைக்கு வெளியே மாணவனை நிற்க சொல்லியதாக கூறப்படுகிறது.இதனால், பள்ளிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து, மாணவன் கீழே குதித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், மாணவன் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. பின், தீவிர சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனைக்கு, அவனது பெற்றோர் அழைத்து சென்றனர்.பள்ளி கட்டடத்திலிருந்து, மாணவன் குதித்ததற்கான காரணம் குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை