வாகன நிறுத்தம்: வரும் 17ல் ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகன நிறுத்தம்: வரும் 17ல் ஏலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க, வரும், 17ம் தேதி ஏலம் நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி பேருந்து நிலையம் அருகே, இரு சக்கர வாகனம், நான்கு சககர வாகன நிறுத்தம், மற்றும் நுழைவு கட்டணம்வசூலிக்கும் ஏலம், 17ம் தேதி பகல், 11:00 மணிக்கு, பேரம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதே போல், வெள்ளிக்கிழமை தோறும், தீயணைப்பு நிலையம் அருகே நடைபெறும் வாரச்சந்தைக்கும் அன்று ஏலம் நடைபெறவுள்ளது. அரசு விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறும் இந்த ஏலத்தில், பங்கேற்க விரும்புவோர், இரண்டு ஏலங்களுக்கும், தனித்தனியாக, 1,000 ரூபாய் முன்வைப்பு தொகையை, ஏலம் விடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் செலுத்த வேண்டும். ஏலம் எடுப்போர், அந்த இடத்திலேயே ஏலத்தொகையை செலுத்த வேண்டும் என, கடம்பத்துார் ஒன்றிய தனி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X