மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி; ரூ.24.50 கோடியில் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி; ரூ.24.50 கோடியில் துவக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மாமல்லபுரம் : ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டு தேசிய நிறுவனத்தில், 24.50 கோடி ரூபாய் மதிப்பு சேவை திட்டங்களை, மத்திய சமூகநீதி அமைச்சர், தாவர்ச்சந்த் கெலாட், நேற்று துவக்கி வைத்தார்.சென்னை, முட்டுக்காட்டில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், ஊனமுற்றோர் மேம்பாட்டு தேசிய நிறுவனம் இயங்கு கிறது.இங்கு, 3.17 கோடி ரூபாய் மதிப்பில், தற்போதைய மாதிரி பள்ளியின் முதல் தளத்தில், நவீன வகுப்பறைகளுடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி மற்றும் மனிதவள மேம்பாட்டு கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் மேம்பட, மேலும் பல வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதற்கான கட்டட பூஜை விழா நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற, மத்திய சமூக நீதி அமைச்சர், தாவர்ச்சந்த் கெலாட், மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்கி, பேசிய தாவது: ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், 24.50 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்காக, பல திட்டங்களை அமைக்கிறது.மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, மத்திய அரசு, 650 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதுவரை, 11.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள், பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.விரைவில், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்க உள்ளோம். இதை பெறுவோர், நாடு முழுவதும் சேவைகள் பெறலாம். தமிழக அரசும் ஒத்துழைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.தமிழக சமூகநலத்துறை அமைச்சர், சரோஜா, மத்திய அரசின் இத்துறை அலுவலர்கள், காஞ்சிபுரம் அ.தி.மு.க., - எம்.பி., மரகதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை