இடைநில்லா புதிய பேருந்தில் பயணியர் இன்றி வருவாய் இழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைநில்லா புதிய பேருந்தில் பயணியர் இன்றி வருவாய் இழப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாமல்லபுரம் : சென்னை - புதுச்சேரி வழித்தட, நடத்துனர் இல்லாத அரசுப் பேருந்துகள், பயணியர் இன்றி, வெற்றுப் பேருந்தாக இயக்கப்படுகின்றன.

சென்னை - புதுச்சேரி இடையே, கடலோரச் சாலை வழியே, அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆட்கள் குறைவு :
சென்னை, கோயம்பேட்டில் புறப்பட்டு, கிண்டி, திருவான்மியூர், மாமல்லபுரம், புதுப்பட்டினம், கூவத்துார், கடப்பாக்கம், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் நின்று, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர்த்து, பிற நாட்களில், பல பேருந்துகள், சில பயணியருடன் மட்டுமே புறப்படுகின்றன. சில இடங்களில் தான், பயணியர் ஏறி, பேருந்து நிரம்புகிறது. இந்நிலையில், தற்போதைய புதிய பேருந்துகள், இடைநில்லாதவையாக இயக்கப்படுகின்றன. இதில், நடத்துனர் இன்றி, ஓட்டுனரே, புறப்படும் இடத்தில், பயணியருக்கு பயணச்சீட்டு வழங்கி, பேருந்தை, வழியில் எங்கும் நிறுத்தாமல் ஓட்டிச் செல்கிறார்.

பரிசீலனை :

மாலை நேர பேருந்துகளில் மட்டுமே, இருக்கை நிரம்புகிறது. பகல் நேர பேருந்துகளில், புறப்படும் இடத்தில், பத்திற்கும் குறைவான பயணியருடன் புறப்பட்டு, 160 கி.மீ., தொலைவிற்கு, வெற்றுப் பேருந்தாகவே செல்கிறது. இதனால், எரிபொருள் விரயம், நிதி இழப்பு ஏற்படுகிறது. இவற்றில், நடத்துனரை நியமித்து, திருவான்மியூர், மாமல்லபுரம், புதுப்பட்டினம், கூவத்துார், மரக்காணம் ஆகிய நிறுத்தங்களில் நின்றுச் செல்ல, நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை